கோலாலம்பூர், மார்ச்.08-
இன்று 2025 ஆம் ஆண்டுக்கான அனைத்துலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பல்வேறு துறைகளில் தொடர்ந்து வெற்றி நடைப் போட்டு வரும் மலேசிய மகளிர்கள் அனைவருக்கும் பேரரசியார் ராஜா ஸாரித் சோஃபியா தமது மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
Wanta Beraspirasi Membina Legasi என்ற 2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் தினக் கருப்பொருளுக்கு ஏற்ப ஓர் உன்னத நோக்கில் தங்களின் லட்சியத்தை நிறைவேற்றுவதில் மகளிர் உறுதிபாடு கொள்ள வேண்டும் என்று பேரரசியார் கேட்டுக் கொண்டார்.
அதேவேளையில் குடும்பத்தில் இல்லதரசியாகவும், பிள்ளைகளுக்கு நல்ல தாயாராகவும், கணவருக்கு நல்ல வாழ்க்கைத் துணையாகவும், நாட்டிற்கு நல்ல குடிமகளாகவும் திகழ்ந்து வரும் அனைத்து மலேசியப் பெண்களுக்கும் தமது மகளிர் தின வாழ்த்துகள் உரித்தாகுக என்று பேரரசியார் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.