தனக்கு கிடைத்த நீதியைப் போல இஸ்மாயில் சப்ரிக்கும் கிடைக்க வேண்டும்

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.08-

கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு வீட்டில் 177 மில்லியன் ரிங்கிட் ரொக்கப் பணம் மற்றும் தங்கக் கட்டிகள் கண்டு பிடிக்கப்பட்டது தொடர்பில் தற்போது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை வளையத்திற்குள் இருந்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்கு நீதி கிடைக்கும் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

47 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தாம் எஸ்பிஆர்எம் விசாரணைக்கு ஆளான போதிலும் இறுதியில் தமக்கு நீதி கிடைத்ததாக அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

அதேபோல் அம்னோவின் உதவித் தலைவரான இஸ்மாயில் சப்ரிக்கும் நிதி கிடைக்கும் என்று தாம் பெரிதும் நம்புவதாக அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்தில் எந்தவொரு அரசியல் தலையீடுமின்றி, நாட்டின் நடப்பு சட்டங்களுக்கு உட்பட்டு, நியாயமான விசாரணையின் அடிப்படையில் இவ்விவகாரத்தை எஸ்பிஆர்எம்மின் முடிவுக்கே அம்னோ விட்டு விடுவதாக அகமட் ஜாஹிட் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS