மகளிர் தினத்தையொட்டி சிறப்பு அஞ்சல் தலைகள்

கோலாலம்பூர், மார்ச்.08-

இன்று 2025 ஆம் ஆண்டு அனைத்துலக மகளிர் தினத்தையொட்டி அஞ்சல் நிறுவனமான போஸ் மலேசியா, சிறப்பு அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளது.

சிறப்பு அஞ்சல் தலைகளை மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ நன்ஸி ஷுக்ரி அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தார்.

நாட்டிற்கு மகளிர்கள் ஆற்றிய பங்களிப்பை கொண்டாடும் வகையில் புத்தாக்கத் சிந்தனையுடன் பிரத்தியேகமாக இந்த அஞ்சல் தலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சிறப்பு அஞ்சல் தலைகளில் காணப்படும் வடிவமைப்பு அம்சங்கள், பெண்களின் பங்களிப்பையும், அவர்களின் முக்கியத்துவத்தையும் நினைவுகூரும் வகையில் உள்ளது என்று நன்ஸி தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS