பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை: முக்கியப் பிரச்சனைகளில் ஒன்றாகக் கருதப்படும்

கோலாலம்பூர், மார்ச்.08-

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய மகளிர் கொள்கையின் கீழ் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகக் கருதப்படும். பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அக்கொள்கை அதில் கவனம் செலுத்தும் என மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஶ்ரீ நன்ஸி ஷுக்ரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக அனைத்துலக மகளிர் தினம் கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய நன்ஸி, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், கடந்தாண்டு 5,249 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் கூறினார். அதனைத் தவிர்த்து வேலைகளில் பெண்களின் ஈடுபாட்டை அதிகரிப்பது உள்ளிட்ட பல சவால்களை அமைச்சு சந்தித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். வேலைகளில் 56.2 விழுக்காட்டு பெண்கள் மட்டுமே உள்ளனர். அவ்வெண்ணிக்கைக் குறைவாகும். ஆண்களின் பங்கேற்பு 82.3 விழுக்காடு இருப்பதை நான்சி சுட்டிக் காட்டினார்.

பொது மற்றும் தனியார் துறையில் முடிவெடுக்கும் நிலையில் பெண்களின் ஈடுபாடு இன்னும் குறைவாகவே உள்ளது. தலைமைப் பொறுப்புகளில் பெண்களின் பங்கை வலுப்படுத்த அதிக முயற்சிகள் தேவை என்பதை இது காட்டுவதாக நன்ஸி மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS