பெண்களுக்கு போதுமான இடமும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும்

கோலாலம்பூர், மார்ச்.08-

தேசிய மேம்பாட்டில் அனைத்து அம்சங்களிலும் பெண்களுக்கு பொதுமான இடமும் வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார். கொள்கை வகுக்கும் நிலை உட்பட பெண்களின் ஈடுபாடு மிகக் குறைவாக இருப்பதைச் சுட்டிக் காட்டிய அவர், அவ்விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

ஒவ்வோர் அமைச்சும் மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சுடன் இணைந்து பெண்களை ஆக்ககரப்படுத்தி அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கும் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் என டத்தோஶ்ரீ அன்வார் கேட்டுக் கொண்டார்.

ஒற்றுமையைப் பற்றி விவாதிக்கும் போது, ஒவ்வோர் அமைச்சிலும் பெண்களின் பங்கு அவசியம். பொதுச் சேவைத் துறையிலும் பெண்களுக்கு போதுமான இடம் ஒதுக்கப்பட வேண்டும். அவ்வகையில் இடமும் பதவியும் வழக்கப்பட்ட சில முக்கியமான நபர்கள் பிரமிக்க வைக்கும் அடைவு நிலையையும் செயல்திறனையும் வெளிப்படுத்தி இருப்பதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

அதே வேளையில் பெண்களின் திறமை மற்றும் ஆற்றலுக்கு ஏற்ப அவர்களுக்கு உரிய பங்கையும் பதவிகளையும் மேம்படுத்துவதற்கான வழிவகைகளைக் கண்டறியுமாறு தேசிய தலைமைச் செயலாளரைக் தாம் கேட்டுக் கொள்வதாகவும் டத்தோஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார். Wanita Beraspirasi Membina Legasi என்ற கருப்பொருளில் இவ்வாண்டு மகளிர் தினம் அனுசரிக்கப்படுவதற்கு ஏற்ப, JUSA எனப்படும் பொதுத் துறையில் முதன்மைப் பதவிகளில் பெண்களை நியமிப்பதில் 30 விழுக்காட்டு ஏற்றம் இருந்தாலும் அதனை மேலும் மேம்படுத்த இடமுண்டு என பிரதமர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS