மலேசியா, பினாங்கு மாநிலத்தின் எடிசன் தமிழ்த் திரைப்பட விழா

ஜார்ஜ்டவுன், மார்ச்.09-

மலேசியா, பினாங்கு மாநில அரசு ஆதரவுடன் முதன் முதலில் தமிழ் திரைப்பட விழா ஏப்ரல் நான்காம் தேதி வெள்ளிக்கிழமை மாலை Queensbay மாலில் உள்ள கோல்டன் ஸ்கிரீன் சினிமாஸ் தியேட்டரில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் அமரன், மெய்யழகன், மகாராஜா, விடுதலை 2 , லப்பர் பந்து ஆகிய ஐந்து திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

அத்திரைப்படத்தைச் சார்ந்த இயக்குநர்கள் , தொழில்நுட்பக் கலைஞர்கள் , நடிகர் நடிகைகள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். பல பிரிவுகளில் ஏப்ரல் ஐந்தாம் தேதி நடைபெற உள்ள 17 ஆம் ஆண்டு எடிசன் திரை விருதுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. Spice Arena அரங்கில் ஏப்ரல் ஐந்தாம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள விருது விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன என எடிசன் விருது குழு தலைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான செல்வகுமார் தெரிவித்தார்.

மேல் விவரங்களுக்கு 016 616 7708 எனும் எண்களில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.

WATCH OUR LATEST NEWS