தேசிய ஆடவர் இரட்டையர் பிரிவு ஜோடியின் போராட்டம் அரையிறுதியுடன் முடிவடைந்து

கோலாலம்பூர், மார்ச்.09-

பிரான்சில் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில் தேசிய ஆடவர் இரட்டையர் வான் அரிஃப் வான் ஜுனைடி-யாப் ராய் கிங் ஜோடியின் உற்சாகமான ஆட்டம் அரையிறுதியில் முடிவடைந்தது. உலக தர வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் சீனாவைச் சேர்ந்த வாங் சாங்-லியாங் வெய் கெங் ஜோடியால், உலகின் 18-வது தர வரிசையில் உள்ள மலேசிய ஜோடியின் முன்னேற்றம் தடுக்கப்பட்டது. 
 
அதே சமயம் அப்போட்டியில்  நாட்டின் சவால் முடிவுக்கு வந்தது. 

காலிறுதியில் தைவானின் நான்காவது சீட் லீ ஜே ஹூய்-யாங் போ ஹ்சுவானை வீழ்த்தியதன் மூலம் ஆச்சரியத்தை ஏற்படுத்திய 2024 பாரிஸ் ஒலிம்பிக்கின் இரண்டாம் நிலை வெற்றியாளர்களான வாங் சாங்-வெய் கெங்கைத் தோற்கடிப்பது கடினமாயிற்று. 

முதல் செட்டை 14-21 என்ற கணக்கில் வீழ்ந்த நிலையில், இரண்டாவது செட்டிலும் 26 நிமிடங்களில் தேசிய வீரர்களின் சவால் முறியடிக்கப்பட்டது. 
 
அதனை அடுத்து, கடந்தாண்டு ஸ்பெயின் மாஸ்டர்ஸ் இறுதியாட்டம் வரை சென்ற வான் அரிஃப் வான்-ராய் கிங் இணையால் அச்சாதனையை மீண்டும் பதிவு செய்ய முடியவில்லை.  

WATCH OUR LATEST NEWS