ஈப்போ, மார்ச்.13
ஈப்போவிற்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான நேரடி விமானச் சேவை அடுத்த மாதம் 25 ஆம் தேதியுடன் நிறுத்தப்படுகிறது.
இவ்விரு வழித்தடங்களுக்கானச் சேவையைத் தொடரும்படி ஏர் ஆசிய விமான நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பேரா மாநில அரசாங்கம் திட்டம் கொண்டுள்ளதாக மாநில கட்டமைப்பு, எரிசக்தி, பொது போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஶ்ரீ முகமட் நிஸார் ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.
ஈப்போவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான நேரடி விமானச் சேவை மிக முக்கித்துவம் வாய்ந்ததாகும். அந்த சேவையைத் தொடராமல் போவதில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் கண்டறியப்படும் என்று நிஸார் ஜமாலுடின் குறிப்பிட்டார்.