தெலுக் இந்தான், மார்ச்.13-
பேரா, தெலுக் இந்தான், லாபு குபோங் என்ற இடத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பது வயது சிறுவனை ஆசிரியர் காலால் எட்டி, உதைத்ததாகக் கூறப்படும் புகார் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த மாணவனின் 41 வயது தாயார், கடந்த ஞாயிற்றுக்கிழமை அளித்துள்ள புகார் தொடர்பில் 52 வயதுடைய அந்த ஆசிரியர் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஹீலிர் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் பக்ரி ஸைனோல் தெரிவித்தார்.
வகுப்பறையில் மாணவர்களுக்கு இடையில் நிகழ்ந்த கைகலப்பைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவனை அந்த ஆசிரியர் எட்டி உதைத்ததாகப் புகார் கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 323 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பக்ரி ஸைனோல் குறிப்பிட்டார்.