மூவார், மார்ச்.13-
ஒரு பெண் உட்பட நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டது மூலம் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 50 தோட்டாக்களை உள்ளடக்கிய உறை ஒன்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
நேற்று மாலை 4.30 மணியளவில் ஜோகூர், மூவார், புக்கிட் பாசீர், பாயா பஞ்சாங்கில் ஒரு வீட்டில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது துப்பாக்கியும், தோட்டாக்களும் மீட்கப்பட்டதாக மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரயிஸ் முக்லிஸ் அஸ்மான் அஸிஸ் தெரிவித்தார்.
பழைய மாடலைக் கொண்ட அந்த துப்பாக்கி, பல்லிகளைச் சுடுவதற்கு தாங்கள் வைத்திருந்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர் என்று ஏசிபி ரயிஸ் முக்லிஸ் குறிப்பிட்டார்.
நால்வரும் பிடிப்பட்ட போது போதையில் திளைத்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.