காதல் ஜோடியை அச்சுறுத்திய போலீஸ்காரருக்கு 7,500 ரிங்கிட் அபராதம்

அம்பாங், மார்ச்.13-

அந்நிய நாட்டுப் பெண்ணும், அவரின் மலேசிய காதலனும் மிக நெருக்கமாக இருந்த காணொளியை அம்பலப்படுத்தப் போவதாக அந்த இளம் காதல் ஜோடியை அச்சுறுத்திய குற்றத்திற்காக போலீஸ்காரர் ஒருவருக்கு அம்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 7,500 ரிங்கிட் அபராதம் விதித்தது.

25 வயதுடைய அடிப் ஐக்கால் ஷாருல் நிஸாம் என்ற அந்த போலீஸ்காரர் மாஜிஸ்திரேட் அமாலினா பசீரா முகமட் டோப் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி அம்பாங், ஜாலான் அம்பாங் ஹில்வியூ அருகில் அந்த போலீஸ்காரர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

காருக்குள் நெருக்கமான இருந்த அந்த காதல் ஜோடியை கைது செய்த அந்த போலீஸ்காரர், பின்னர் தாம் பதிவு செய்த காட்சியை அம்பலப்படுத்தாமல் இருக்க 2 ஆயிரம் ரிங்கிட் பணம் கேட்டு அச்சுறுத்தியதாக குற்றப்பதிவில் கூறப்பட்டது.

WATCH OUR LATEST NEWS