கோலாலம்பூர், மார்ச்.13-
வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு பொதுச் சேவை ஊழியர்களுக்கு சிறப்பு நிதி உதவித் தொகையை வழங்குமாறு அரசு ஊழியர்களை பிரதிநிதிக்கும் கியூபெக்ஸ், இன்று அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளது.
நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை வரவேற்கும் அரசு ஊழியர்களின் நிதி சுமையைக் குறைப்பதற்கு இந்த உதவித் தொகை பேருதவியாக இருக்கும் என்று கியூபெக்ஸ் தலைவர் டத்தோ டாக்டர் அட்னான் மாட் தெரிவித்துள்ளார்.
தவிர கிராமங்களுக்குத் திரும்பும் அரசு ஊழியர்கள், தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கும் இந்த உதவித் தொகை உதவியாக இருக்கும் என்று டாக்டர் அட்னான் குறிப்பிட்டார்.