கேவின் கொலை வழக்கில் முன்னாள் மருத்துவருக்கு தொடர்பில்லை

கோலாலம்பூர், மார்ச்.13-

முன்னாள் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் காலஞ்சென்ற டத்தோ அந்தோணி கேவின் மோராயிஸ் கொலையில் முன்னாள் உடற்கூறு மருத்துவ நிபுணரான கர்னல் R. குணசேகரனை தொடர்புபடுத்த எந்த ஆதாரமும் இல்லை என்று கூட்டரசு நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

குற்றம் நடந்த இடத்தில் அல்லது தடயங்கள் சேகரிக்கப்பட்ட இடங்களில் குணசேகரன் ஆஜராகியுள்ளார் என்பதற்கு எந்தவொரு சாட்சியமும் இல்லை என்று அவரின் வழக்கறிஞர் டத்தோ என். சிவானந்தன் தெரிவித்தார்.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்ற ஐந்து பேருடன் தனது கட்சிக்காரர் கொலை தொடர்புடைய நோக்கத்தை பகிர்ந்துக் கொண்டார் என்பதற்கு அரசு தரப்பில் எந்தவொரு சாட்சியமும் நிரூபிக்கப்படவில்லை என்று வழக்கறிஞர் சிவானந்தன் வாதிட்டார்.

குற்றவாளி ஒருவரின் சாட்சியம், பின்னர் அவர் அரசு தரப்பு சாட்சியாக மாறி, குணசேகரனைக் குற்றவாளியாக்கியது.

ஆனால், இந்த கொலையில் குணசேகரன் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதற்கு ஓர் ஊகக் கோட்பாட்டின் அடிப்படையில் சொல்லப்பட்டதே தவிர அதற்கான ஆதாரங்களை பிராசிகியூஷன் நிரூபிக்கத் தவறியது என்று வழக்கறிஞர் சிவானந்தன் தமது வாதத்தில் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS