எஸ்பிஆர்எம் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன்

புத்ராஜெயா, மார்ச்.13-

தனது முன்னாள் அதிகாரியின் வீட்டில் 177 மில்லியன் ரிங்கிட் பெறுமாறுள்ள ரொக்கப் பணம் மற்றும் தங்கக் கட்டிகள் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனக்கு எதிரான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு நல்கப் போவதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்துள்ளார்.

புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் இன்று 5 மணி நேர விசாரணைக்கு ஆளாகிய இஸ்மாயில் சப்ரி, அங்கு குழுமியிருந்த செய்தியாளர்களிடம் கருத்துரைக்கவில்லை. ஆனால், விசாரணைக்குப் பிறகு தனது முகநூலில் வெளியிட்ட குறுந்தகவலில் விசாரணை முற்றுப் பெறும் வரை முழு ஒத்துழைப்பு நல்குவதாக அறிவித்துள்ளார்.

இன்று காலையில் 10 மணிக்கு தொடங்கிய இஸ்மாயில் சப்ரி சம்பந்தப்பட்ட எஸ்பிஆர்எம் விசாரணை பிற்பகல் 3 மணிக்கு முடிவுற்றது. விசாரணை நாளை வெள்ளிக்கிழமையும் தொடரும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

WATCH OUR LATEST NEWS