டாமன்சாரா, மார்ச்.14-
பெட்டாலிங் ஜெயா, டாமன்சாராவில் ஆடவர் ஒருவர் கட்டிலில் படுத்த வாக்கில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 10 ஆம் தேதி பிற்பகல் 2.35 மணியளவில் பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாருல்நிஸாம் ஜாபாஃர் தெரிவித்தார்.
27 வயதுடைய அந்த நபர், 72 மணி நேரத்திற்கு முன்னதாக இறந்து இருக்கலாம் என்று தடயவியல் நிபுணர்கள் தெரிவித்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சவப் பரிசோதனைக்காக அந்த நபரின் உடல், மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டதாக ஏசிபி ஷாருல்நிஸாம் தெரிவித்தார்.