கோலாலம்பூர், மார்ச்.14-
அந்நிய நாட்டவர்களுக்கு சட்டவிரோத ஏஜெண்டுகளாகச் செயல்பட்டு வந்த நான்கு வங்காளதேச ஆடவர்களை குடிநுழைவுத்துறை கைது செய்துள்ளது.
நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 22 க்கும், 38 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நான்கு வங்காளதேசிகளும் கோலாலம்பூர் மாநகரிலும், சிலாங்கூர், பண்டார் புக்கிட் ராஜாவில் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறை அறிவித்தது.
இந்த சட்டவிரோத ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டது மூலம் மியன்மார், இந்தோனேசியா மற்றும் இந்தியா என மொத்தம் 134 கடப்பிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர், டத்தோ சகாரியா ஷாபான் தெரிவித்தார்.