ஜோகூர் பாரு, மார்ச்.14-
ஜோகூர்பாரு, சுல்தான் இஸ்கண்டார் கட்டடத்தில் உள்ள சுங்கம், குடிநுழைவு மற்றும் நோய்த் தடுப்பு சாவடி மையத்திற்குச் செல்லும் EDL நெடுஞ்சாலையில் வாகனமோட்டிகள் இருவர் கடும் வாய் தகராற்றில் ஈடுபட்டது, கம்பு ஒன்றை பயன்படுத்தி அச்சுறுத்தல் விடுத்தது தொடர்பில் போலீசார் இரண்டு நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அந்த இரு நபர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக ஜோகூர்பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவூப் செலாமாட் தெரிவித்தார்.
27 விநாடிகள் ஓடக் கூடிய அந்த காணொளியில் முதலில் வாய்த் தகராற்றில் ஈடுபட்ட வாகனமோட்டிகள் பின்னர் கைகலப்பிற்கு வித்திடும் வகையில் கம்பு ஒன்றை பயன்படுத்தியுள்ளனர் என்று ரவூப் செலாமாட் குறிப்பிட்டார்.