பெட்டாலிங் ஜெயா, மார்ச்.14-
வரும் ஞாயிற்றுக்கிழமை ஜசெக.வின் உயர் மட்டப் பதவிகளுக்கான மத்திய செயற்குழுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் ஜசெக.வின் உதவித் தலைவரும், செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினருமான திரேசா கொக்கின் இரண்டு முன்னாள் உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருந்த போதிலும் இந்த கைது நடவடிக்கையினால் திரேசா கொக்கின் வெற்றி வாய்ப்பு பாதிக்காது என்று ஜசெக.வின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
செபூத்தே நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 16 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்ட் மற்றும் திறன் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்குவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மோசடி நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக திரேசா கொக்கின் இரண்டு முள்ளாள் உ தவியாளர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.
தனது அதிகாரிகளின் இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து எதுவுமே நடவாது போல இருக்கும் திரேசா கொக், வரும் கட்சித் தேர்தலில் அவரின் வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என்று கட்சி வட்டாரங்கள் கூறி வருகின்றன.
எனினும் ஜசெக.வின் முக்கியத் தூண்களில் ஒருவரான திரேசா கொக், நீண்ட காலம் அரசியல் அனுபவம் கொண்டவர்.
ஜனநாயகத்தையும், நேர்மையைய்ஜ்ம் நிலைநாட்டுவதில் அவர் எல்லா காலக் கட்டத்திலும் போராடி வந்துள்ளார். வரும் தேர்தலில் திரேசா கொக் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று ஜசெக.வின் முன்னாள் பொதுச் செயலாளராக லிம் கிட் சியாங் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.