பெட்டாலிங் ஜெயா, மார்ச்.14-
தனது தலைமையில் அமைக்கப்பட்ட உரிமைக் கட்சியை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கு செய்து கொள்ளப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது தொடர்பில் உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுஃடின் நசுத்தியோன் இஸ்மாயிலிடம் செய்து கொள்ளப்பட்ட மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாக அந்த கட்சியின் தலைவர் டாக்டர் P. இராமசாமி தெரிவித்துள்ளார்.
உரிமைக் கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கு தாங்கள் செய்து கொண்ட விண்ணப்பம், கடந்த ஆண்டு ஜுலை 4 ஆம் தேதி சங்கங்களின் பதிவு அலுவலகமான ROS- ஸினால் தள்ளுபடி செய்யப்பட்டதாக டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.
ROS-ஸின் இந்த முடிவை எதிர்த்து உள்துறை அமைச்சர் என்ற முறையில் சைபுஃனிடம் செய்து கொள்ளப்பட்ட மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தங்களின் விண்ணப்பத்தை நிராகரித்து இருக்கும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து வழக்கு தொடுப்பதற்கு கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து இருப்பதாக டாக்டர் இராமசாமி தெரிவித்தார்.