தனது தம்பிக்கு குத்தகையைக் கொடுத்ததாக தலைமை ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

ஷா ஆலாம், மார்ச்.14-

பள்ளி நிர்மணிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு 48 ஆயிரத்து 50 ரிங்கிட் மதிப்புள்ள குத்தகையை தனது தம்பியின் நிறுவனத்திற்குக் கொடுத்ததாக பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் ஷா ஆலாம், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

56 வயது முகமட் ஸைனி மிஸ்கோன் என்ற அந்த தலைமையாசிரியர், சிலாங்கூர் மாநிலத்தில் வீற்றிருக்கும் சிறப்புப்பள்ளி ஒன்றில் தனது பதவியைப் பயன்படுத்தி, தனது உடன்பிறப்புக்கு குத்தகையைக் கொடுத்ததாகக் குற்றப் பதிவு வாசிக்கப்பட்டது.

பள்ளியின் கூரையைச் சீரமைத்தல், துணைப் பாதையை உருவாக்குதல் முதலிய பணிகளுக்காகக் குத்தகைத் திட்டத்தில் தடை செய்யப்பட்ட நிபந்தனையையும் மீறி, தனது தம்பிக்கு அந்த குத்தகையை வழங்கியதாக அந்த தலைமையாசிரியருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜுலை 8 ஆம் தேதி இக்குற்றத்தைப் புரிந்ததாக 2009 ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அந்த தலைமையாசிரியர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS