கோலாலம்பூர், மார்ச்.14-
நாட்டின் முன்னணி எரிசக்தி நிறுவனமான சபூரா எனர்ஜி பெர்ஹாட்டில் நிகழ்ந்து இருப்பதாகக் கூறப்படும் மிகப் பெரிய ஊழல் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் இன்று இரண்டு விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளது.
அந்த நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டு நிதி அறிக்கை மற்றும் பண கோரல்கள் தொடர்பில் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பந்தப்பட்ட நிறுவனம் தற்போது 110 கோடி ரிங்கிட் கடனை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது போன்ற நிறுவனங்களில் நிகழ்ந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டுமே தவிர அவற்றை மீட்சிப் பெற காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.