கோலாலம்பூர், மார்ச்.15-
நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்திற்கான செலவுகளைச் சமாளிப்பதற்காக அதிகமானோர், தங்களின் தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப். பணத்தில் கைவைக்கத் தொடங்கியுள்ளனர்.
இபிஎப். வாரியத்தில் மூன்றாவது கணக்கில் உள்ள தங்களின் தொகையை மீட்பதில் அதிகமானோர் ஆர்வம் காட்டி வருவதாக அறியப்பட்டுள்ளது.
நோன்புப் பெருநாள் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி கொண்டாடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெருநாளை முன்னிட்டு புத்தாடைகளை வாங்குவதற்கும், பலகாரங்களைத் தயாரிக்கவும், வீடுகளை அலங்கரிக்கவும் செலவுகள் அதிகரித்து வருவதாக பலர் கூறுகின்றனர்.
கடந்த மாதம் புதிய பள்ளி தவணைக் காலம் தொடங்கியதால் ஏகப்பட்ட செலவுகள் மத்தியில் பெருநாளை வரவேற்பதற்கு இபிஎப். பணத்தில் கைவைப்பதை தவிர தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று பெரும்பாலான சந்தாதாரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.