ஜோகூர் பாரு, மார்ச்.15-
கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பில் மோதி, தீப்பிடித்துக் கொண்டதில் அதன் ஓட்டுநர் கருகி மாண்டார். இச்சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஜோகூர், செனாயை நோக்கி, செனாய் – டேசாரு நெடுஞ்சாலையின் 11.3 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
கொழுந்து விட்டு எரியும் தீயின் மத்தியில் புரோட்டோன் ஐரிஸ் காரின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் அதன் ஓட்டுநர் கருகி மாண்டதாக ஜோகூர் ஜெயா தீயணைப்பு நிலைய ஒருங்கிணைப்பாளர் சைபுஃல்பாஹ்ரி மாபோப் தெரிவித்தார்.
காரை சூழ்ந்து கொண்ட தீயை அணைக்க 12 வீரர்கள் சுமார் 20 நிமிடம் போராடியதுடன், 80 விழுக்காடு சேதமுற்ற அந்த காரிலிருந்து ஓட்டுநரின் உடலை மீட்டதாக அவர் குறிப்பிட்டார்.