ஆருடத்தை மறுத்தார் லிம் குவான் எங்

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.15-

ஜசெக.வின் உயர் மட்டப் பதவிகளுக்கான மத்தியச் செயற்குழு தேர்தல் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் தனது தலைவர் பதவியை தற்காத்துக் கொள்வதற்கு மீண்டும் போட்டியிட முனைத்துள்ள ஜசெக.வின் நடப்புத் தலைவர் லிம் குவான் எங், மத்திய செயற்குழுவில் போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொண்டதாகக் கூறப்படும் ஆருடத்தை வன்மையாக மறுத்துள்ளார்.

மத்திய செயலவைக்குப் போட்டியிடும் தனது வேட்பு மனுவை வாபஸ் பெறவில்லை என்று இன்று காலையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஜசெக.வின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கின் மகனான லிம் குவாங் எங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

போட்டியிலிருந்து தாம் விலகிவிட்டதாகப் பகிரப்பட்டு வரும் தகவல், உண்மைக்குப் புறம்பானதாகும். வெற்றியோ, தோல்வியோ, தனது பதவியைத் தற்காத்துக் கொள்ளத் தாம் இன்னமும் வெற்றிக்களத்தில் இருப்பதாக லிம் குவான் எங் அறிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS