சட்டவிரோதக் குடியேறிகளைத் திருப்பி அனுப்பும் திட்டத்தை நீட்டிக்க ஆராயப்படுகிறது

கூலிம், மார்ச்.15-

மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் அந்நிய நாட்டவர்களைப் பொது மன்னிப்பின் வாயிலாக அவர்களின் நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படும் திட்டம், வரும் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் அத்திட்டத்தை மேலும் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் நீட்டிக்கச் செய்வதற்கான உத்தேசத் திட்டம் குறித்து குடிநுழைவுத்துறை பரிசீலனை செய்து வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுஃடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக ஒரு கூட்டுத் திட்ட அணுகுமுறையின் வாயிலாக அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கான செயல்திட்டத்தை அமல்படுத்த சட்டத்துறை அலுவலகத்தின் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையில் உள்துறை அமைச்சு ஈடுபட்டுள்ளதாக சைபுஃடின் குறிப்பிட்டார்.

சட்டவிரோத குடியேறிகளை மனிதாபிமான அடிப்படையில் அவர்களின் தாயத்திற்குத் திருப்பி அனுப்பும் மாற்று வழிதான் இது என்று அமைச்சர் சைபுஃடின் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS