மூவார், மார்ச்.15-
லோரியில் உரசி, கீழே விழுந்த மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், லோரியின் சக்கரத்தில் சிக்கி, பரிதாபமாக மாண்டார். இத்துயரச் சம்பவம் இன்று காலை 7.10 மணியளவில் ஜோகூர், மூவார், ஜாலான் புக்கிட் பாசிரில் நிகழ்ந்தது.
மூவாரிலிருந்து புக்கிட் பாசிர், ஜோராக் என்ற இடத்தில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டு இருந்த 41 வயதுடைய நபர், லோரியின் சக்கரத்தில் அரைப்பட்டு மாண்டதாக மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முக்லிஸ் அஸ்மான் அஸிஸ் தெரிவித்தார்.
அந்த லோரியில் மோதப்பட்ட பின்னர், பின் தொடர்ந்து வந்த மேலும் சில வாகனங்களாலும் அந்த நபர் மோதப்பட்டுள்ளதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று முக்லிஸ் அஸ்மான் குறிப்பிட்டார்.