முதியவர் வெட்டிக் கொலை : 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு

கோலாலம்பூர், மார்ச்.15-

கடந்த வியாழக்கிழமை, பூச்சோங், பண்டார் பாரு பூச்சோங்கில் உள்ள ஒரு வீட்டில் முதியவர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பில் போலீசார், இதுவரையில் அறுவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்துள்ளார்.

இந்த கோரக் கொலையைப் புரிந்த சந்தேகப் பேர்வழியை போலீசார் தேடி வரும் அதே வேளையில் கொலைக்கான பின்னணியையும் ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

70 வயது மதிக்கத்தக்க அந்த முதியவரின் உடலில் நடத்தப்பட்ட தடயவியல் சோதனையில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் ஆழமான பல வெட்டுக் காயங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக வான் அஸ்லான் தெரிவித்தார்.

அந்த முதியவர் பயன்படுத்திய கைப்பேசியும் காணப்படவில்லை. அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து மாது ஒருவர் இது குறித்து போலீசுக்கு தகவல் அளித்ததாக அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS