சிரம்பான், மார்ச்.15-
நாளை நடைபெறவிருக்கும் ஜசெக. உயர் மட்டப் பதவிகளுக்கான தேர்தலில் மத்திய செயற்குழுவிற்கு போட்டியிடும் நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் சுப்பிரமணியம், தனது இறுதிக் கட்டப் பிரச்சாரத்தை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறார்.
மத்திய செயற்குழுவில் தனது வெற்றியானது, கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கின் கரங்களை மேலும் வலுப்படுத்தும் என்று வீரப்பன் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் தாம் சந்தித்த பேராளர்கள், தமக்கு அபரிமித ஆதரவு வழங்க முன்வந்திருப்பது, தன்னை பிரமிக்க வைப்பதாக வீரப்பன் குறிப்பிட்டார்.
எனினும் மத்திய செயலவைக்குத் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால் கட்சியை வலுப்படுத்துவதிலும் உறுப்பினர்களிடையே ஒருமைப்பாட்டை வளர்ப்பதிலும், கட்சிக்குத் தாம் ஆற்றவிருக்கும் அடுத்த கட்ட பங்களிப்பு குறித்தும் பேராளர்களுக்கு விளக்கம் அளித்து வருவதாக ரெப்பா சட்டமன்ற உறுப்பினரான வீரப்பன் தெரிவித்தார்.
முதல் முறையாக மத்திய செயலவைக்குப் போட்டியிடும் தமக்கு பேராளர்கள் பிளவுப்படாத ஆதரவை வழங்கி தம்மை வெற்றிப் பெறச் செய்வார்கள் என்று பெரிதும் நம்புவதாக வீரப்பன் குறிப்பிட்டார்.
மத்திய செயலவைக்குப் போட்டியிடும் வீரப்பனின் எண் 62 ஆகும்.