ஈப்போ, மார்ச்.15-
கேமரன் மலைக்குச் செல்லும் சாலையில் விரைவு பேருந்து ஒன்று சாலையை விட்டு விலகி, விபத்துக்குள்ளானதில் மூவர் காயம் அடைந்தனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 5.15 மணியளவில் கேமரன் மலைக்குச் செல்லும், சிப்பாங் பூலாய் சாலையில் நிகழ்ந்தது.
இந்த விபத்து தொடர்பில் அதிகாலை 5.30 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் சபாரொட்ஸி நோர் அஹ்மாட் தெரிவித்தார்.
அந்த பேருந்து சிங்கப்பூரிலிருந்து 23 பயணிகளை ஏற்றிக் கொண்டு பிரசித்திப் பெற்ற அந்த சுற்றுலாத் தலத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.
பேருந்து ஓட்டுநர், கால் முறிவுக்கு ஆளாகியுள்ளார். இதர இரண்டு பயணிகள் சொற்ப காயங்களுக்கு ஆளானதாக அவர் விளக்கினார்.