கோலாலம்பூர், மார்ச்.15-
மலாயான் ரயில்வே பெர்ஹாட்டான கேடிஎம்பி, தனது மின்சார ரயில் போக்குவரத்தான ஈடிஎஸ் சேவையை, ஜோகூர், சிகமாட்டிலிருந்து பாடாங் பெசார் வரை இன்று விரிவுப்படுத்தியது. முதல் ஈடிஎஸ் ரயில் சிகாமட்டிலிருந்து பாடாங் பெசாருக்கு காலை மணி 7.55 க்கு புறப்பட்டது.
அதேவேளையில் பட்டர்வொர்த்திலிருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்ட ஈடிஎஸ் ரயில், பிற்பகல் 2.57 மணிக்கு சிகாமட்டைச் சென்றடைந்ததாக மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின் தலைமை செயல்முறை அதிகாரி ராணி ஹிஷாம் சம்சுடின் தெரிவித்தார்.
வடக்கிலிருந்து தெற்கே சிகாமட் வரை ஈடிஎஸ் ரயில் சேவை விரிவுப்படுத்தப்பட்டது மூலம் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பெரும் உந்தும் சக்தியாக அமையும் என்று ராணி ஹிஷாம் குறிப்பிட்டார்.
சிகாமட் ஈடிஎஸ் ரயில் சேவை விரிவுப்படுத்தப்பட்டதையொட்டி சலுகைக் கட்டணமாக டிக்கெட் விலையில் 10 ரிங்கிட் தள்ளுபடி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.