கோலாலம்பூர், மார்ச்.15-
மலேசிய வழக்கறிஞர் மன்றம் மற்றும் மாநில வழக்கறிஞர் மன்றங்கள் ஏற்பாடு செய்யக்கூடிய நிகழ்வுகளில் மதுபானத்திற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்ட தீர்மானத்தை பேராளர்கள் நிராகரித்தனர்.
மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் 79 ஆவது பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. மொத்தம் 14 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. கடைசியாக முன்மொழியப்பட்ட மதுபான புழக்கம் தடை மீதான தீர்மானத்தை எதிர்த்து 400 க்கும் மேற்பட்ட பேராளர்கள் வாக்களித்ததாக மூத்த வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் சுமார் 500 பேராளர்கள் கலந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.