கார் பள்ளத்தாக்கில் விழுந்ததில் மூதாட்டி மரணம்

கோத்தா பாரு, மார்ச்.15-

கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தாக்கில் விழுந்ததில் 72 வயது மூதாட்டி உயிரிழந்தார். மேலும் இருவர் கடும் காயங்களுக்கு ஆனாகினர்.

இச்சம்பவம் இன்று கிளந்தான், ஜாலான் கோத்தா பாரு – குவா மூசாங் சாலையில் நிகழ்ந்தது. மூவரும் கோலாலம்பூரிலிருந்து கிளந்தான் பாசீர் மாஸ்ஸை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.

21 வயது நபர் செலுத்திய கார், வேகக் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தாக்கில் விழுந்ததாக கோல கிராய் மாவட்ட போலீஸ் தலைவர் மஸ்லான் மாமாட் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS