பாராங் முனையில் ரொக்கப் பணம் கொள்ளை

கிள்ளான், மார்ச்.15-

கிள்ளான், மேருவில் செயல்பட்டு வரும் பொருள் பட்டுவாடா சேவை மையம் ஒன்றில் பாராங்கை ஆயுதமாக ஏந்திய முகமூடி கொள்ளைக் கும்பல் ஒன்று 46 ஆயிரம் ரி ங்கிட் ரொக்கத்தைக் கொள்ளையிட்டுச் சென்றது.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.19 மணியளவில் நிகழ்ந்ததாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி, S. விஜயராவ் தெரிவித்தார்.

பேரோடுவா பேஸா காரில் வந்த அந்த முகமூடிக் கும்பல், பணியாளர்களைப் பாராங் முனையில் அச்சுறுத்தி இந்த துணிகரக் கொள்ளையை நடத்தியுள்ளது.

இது குறித்து அந்த மையத்தின் பெண் அதிகாரியிடமிருந்து தாங்கள் புகாரைப் பெற்று இருப்பதாக விஜயராவ் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS