கோலாலம்பூர், மார்ச்.15-
மலேசிய நீதிப பரிபாலனம் சுதந்திரமாகவும், எந்தவொரு நெருக்குதலுக்கு அடிப்பணியாமலும் சுயேச்சையாகச் செயல்படுவதற்கு வழக்கறிஞர்களைப் பிரதிநிதிக்கும் மிகப் பெரிய அமைப்பான மலேசிய வழக்கறிஞர் மன்றம் இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
நாட்டின் நீதிப் பரிபாலனத்தில் அரசு நிர்வாகத் தரப்பினர் அல்லது தனிநபர்கள் தலையிடும் நடவடிக்கையை மலேசிய வழக்கறிஞர் மன்றம் முழு வீச்சில் எதிர்க்கும் என்று கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் 79 ஆவது பொதுக் கூட்டத்தில் தீர்மானம் முன்மொழியப்பட்டு ஏகனமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.