பெட்டாலிங் ஜெயா, மார்ச்.16-
முகமது ஷா பிஃர்டாவுஸ் சஹ்ரோம் ஒரு வழியாகத் தனது டிராக் சைக்கிளோட்ட வாழ்க்கையில் ஒரு பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார். 29 வயதான இவர், கோன்யா வெலோட்ரோமில் நடந்த UCI டிரக் நேஷன்ஸ் கிண்ண சைக்கிளோட்டப் போட்டியில் கெய்ரின் பிரிவில் சிறப்பான திறனை வெளிப்படுத்தி தங்கம் வென்றார்.
வலது முழங்காலில் தசைநாண் அழற்சி காயம் இருந்த போதும், கூட்டத்தினரின் உரத்த ஆரவாரங்களுக்கு மத்தியில் அவர் பந்தயத்தை வென்று வெற்றியைக் கைப்பற்றினார்.
ஒலிம்பிக்கின் முன்னாள் வெண்கலப் பதக்கம் வென்ற பிரான்சின் செபாஸ்டியன் விஜியர் வெள்ளி பெற்றார். கடந்த மாதம் மலேசியாவில் நடந்த போட்டியில் வாகை சூடிய ஆசிய சாம்பியனான ஜப்பானின் ஷின்ஜி நகானோ வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
ஷா ஃபிர்தாஸ் முன்னதாக தனது அரையிறுதிப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தேர்வானார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் பாரிஸ் ஒலிம்பிக்கில் மலேசியாவிற்கு பதக்கம் பெற்றுத் தர தவறிய ஏமாற்றத்தை ஷா பிஃர்டாவுஸ் இதன் மூலம் ஈடு செய்தார்.