ஷா ஆலாம், மார்ச்.16-
டிஏபி-யின் 18வது தேசிய நிலையிலான மாநாட்டை பாரிசான் நேஷனல் தலைவர்கள் புறக்கணித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை டிஏபி மறுத்துள்ளது. அதற்கு மாறாக, பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியைத் தவிர வேறு முக்கிய தலைவர்களின் பங்கேற்பு இந்த மாநாட்டில் இல்லை என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
நாங்கள் நம்பிக்கைக் கூட்டணியில் உறுப்பியம் பெற்றுள்ள கட்சிகள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளன. டிஏபி-க்கும் பாரிசான் நேஷனலுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. சில நேரங்களில் நாங்கள் எங்கள் சொந்த உறுப்புக் கட்சிகளை மட்டுமே உள்ளடக்குகிறோம், இது வழக்கமான ஒன்று என அவர் கூறினார்.