அந்த சம்பவம் ஒற்றுமையுணர்வைப் பாதிக்கவில்லை

ஜோகூர் பாரு, மார்ச்.17-

புனித நோன்பு மாதத்தில் உணவகம் ஒன்றில் உணவருந்திக் கொண்டு இருந்த முஸ்லிம் அல்லாத ஆடவர் ஒருவரை, நபர் ஒருவர் அறைந்த செயல், பல இன மக்கள் வசிக்கும் மலேசியாவின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை பாதிக்கச் செய்யவில்லை என்று தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் தெரிவித்தார்.

ஜோகூர் பாருவில் ஒரு பேராங்காடி மையத்தில் உள்ள ஓர் உணவகத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் ஆத்திரத்தால் எழுந்த வன்மமே தவிர அது ஒருமைப்பாட்டைப் பாதிக்கவில்லை என்று அமைச்சர் விளக்கம் அளித்தார்.

எனினும் நாட்டின் ருக்குன் நெகாரா கோட்பாட்டை மதிக்கும் வகையில் இது போனற் சம்பவம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் வேரூன்றப்பட வேண்டும்.

இத்தகைய சம்பவத்தைத் தாமும் கண்டிப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், இச்சம்பவம் குறித்து எலிஜா என்பவர், போலீசில் புகார் செய்து இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

WATCH OUR LATEST NEWS