கோலாலம்பூர், மார்ச்.18-
அண்மையில் தேசிய பதிவு இலாகாவினால் அம்பலப்படுத்தப்பட்ட மோசடிக் கும்பல் மூலம் தயாரிக்கப்பட்ட கால தாமதமாக பதிவு செய்யப்படும் பிறப்புச் சான்றிதழ் மோசடி வேலையில் ஒவ்வொரு பிறப்புச் சான்றிதழும் தலா 10 ஆயிரம் ரிங்கிட் முதல் 50 ஆயிரம் ரிங்கிட் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ், குடியுரிமை இல்லாத பெற்றோர்கள் அல்லது குழந்தையைத் தத்தெடுக்க விரும்பும் பெற்றோர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.