ஜேபிஜே அதிகாரிக்கு ஓராண்டு சிறை

ஆயர் குரோ, மார்ச்.18-

லஞ்ச ஊழல் தொடர்பில் எட்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே அதிகாரி ஒருவருக்கு மலாக்கா, ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்றம் இன்று ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது.

அத்துடன் 80 ஆயிரம் ரி ங்கிட் அராதம் விதித்தது. 38 வயதான சே பாஃட்ஸி இஸ்வான் சே ஜொஹாரி என்ற அந்த ஜேபிஜே அதிகாரி, குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நீதிபதி எலிசாபேட் பாயா வான் மேற்கண்ட தண்டனையை விதித்தார்.

அதிக எடையை சுமந்து வரும் குறிப்பிட்ட நிறுவனங்களின் லோரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூறி இதர ஜேபிஜே அதிகாரிகளுக்கு 4 ஆயிரத்து 250 ரிங்கிட் லஞ்சம் கொடுத்ததாக அந்த ஜேபிஜே அதிகாரி குற்றஞ்சாட்டப்பட்டார்.

மலாக்கா தெங்காவில் கடந்த 2019 ஆம் ஆண்டுக்கும் 2020 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அந்த அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டது.

WATCH OUR LATEST NEWS