போலீஸ் படையின் புதிய தலைவராக டத்தோஸ்ரீ அயோப் கான்- ஆருடங்கள் வலுக்கின்றன

கோலாலம்பூர், மார்ச்.18-

பதவி ஓய்வு பெறவிருக்கும் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேனுக்கு பதிலாக நாட்டின் புதிய போலீஸ் படைத்தலைவாக டத்தோஸ்ரீ அயோப் கான் நியமிக்கப்படவிருக்கிறார் என்று ஆருடம் கூறப்பட்டுள்ளது.

இரண்டு வருட ஒப்பந்தத்தில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ள டான்ஸ்ரீ ரஸாருடின் வரும் ஜுன் மாதம் பணி ஓய்வு பெறவிருக்கிறார்.

அவருக்கு பதிலாக நாட்டின் போலீஸ் படையின் முதல் நிலை பதவியான ஐஜிபி பொறுப்புக்கு ,போலீஸ் படையின் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ அயோப் கான் நியமிக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

62 வயதுடைய டான்ஸ்ரீ ரஸாருடின் இடத்தை 59 வயது அயோப் கான் நிரப்பவிருப்பதாகக் கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS