இண்டர் மியாமி, மார்ச்.18-
அர்ஜெண்டின அணி கேப்டன் லியோனல் மெஸ்சி உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தின் இரு முக்கிய தகுதிச் சுற்று ஆட்டங்களில் களமிறங்கவில்லை. அவருக்கு தசைப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயமே அதற்குக் காரணம். எனவே மெஸ்சியை உருகுவே மற்றும் பிரேசிலுக்கு எதிரான ஆட்டங்களில் பார்க்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளப்புகளுக்கு இடையிலான மேஜர் லீக் கால்பந்து போட்டியில் மெஸ்சியின் இஸ்டர் மியாமி அணி 2க்கு 1 என்ற கோல்களில் அட்லாண்டா யுனைடெட்டை வீழ்த்தியது. அவ்வாட்டத்தில் கோலடித்த மெஸ்சி பின்னர் தசை வலிக்கு ஆளானார். அதனால் 37 வயது மெஸ்சி உருகுவே மற்றும் பிரேசிலுக்கு எதிரான ஆட்டங்களில் களமிறங்கும் ஆட்டக்கார்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பயிற்றுனர் லியோனல் ஸ்கோலொனி தெரிவித்தார். அதோடு மெஸ்சி சிகிச்சைக்காக அமெரிக்க செல்லவிருப்பதாகவும் அவர் கூறினார்.