குன்மிங், மார்ச்.18-
தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்தாகவும், மேலும் நான்கு பேர் காணாமல் போயிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல நாட்கள் தொடர்ந்து பெய்த மழையைத் தொடர்ந்து, ஃபுகோங் கவுண்டியில் லுமெடெங்கில் ஓர் ஆற்றின் அருகே இன்று அதிகாலை 4:50 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டதாக அரசாங்கத்தின் தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முதலில் காணாமல் போன ஆறு பேரில், ஒருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை. மற்றொருவர் காலை 8:33 மணிக்குக் கண்டுபிடிக்கப்பட்டார். ஆனால் மருத்துவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் சிகிச்சை பலனளிக்காது இறந்தார்.
மீட்புப் பணியாளர்கள் மற்றவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.