சுங்கை பூலோ, மார்ச்.18-
வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் தொகுதித் தேர்தலில் சுங்கைப் பூலோ தொகுதித் தலைவராக டத்தோஸ்ரீ R. ரமணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தலைவர் பதவிக்கு போட்டியிட யாரும் வேட்புமனுதாக்கல் செய்யாததால் தாம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சரான டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
சுங்கை பூலோ தொகுதியைத் தொடர்ந்து வழிநடத்துவதற்கு தம்மை போட்டியின்றி தேர்வு செய்த தொகுதி உறுப்பினர்களுக்கு டத்தோஸ்ரீ ரமணன் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.