கூச்சிங், மார்ச்.18-
16 வயதுடைய உறவுக்காரப் பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக முன்னாள் போலீஸ்காரர் ஒருவர் இன்று சரவாக், கூச்சிங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
57 வயதுடைய அந்த முன்னாள் போலீஸ்காரர், குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
கடந்த 2003 க்கும் 2009 க்கும் இடைப்பட்ட ஆண்டில் பெட்ரா ஜெயாவில் உள்ள 16 வயதுடைய அந்தப் பெண்ணின் வீட்டில் முன்னள் போலீஸ்காரர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.