முக்கா, மார்ச்.18-
பத்து வயது சிறுவனும், அவனது 7 வயது தங்கையும் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு கிளை நதியில் குளித்துக் கொண்டு இருந்த போது நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இச்சம்பவம் சரவாக், முக்காவில் உள்ள சுங்கை பாத்தாங் முக்காவில் இன்று பிற்பகல் 3.50 மணியளவில் நிகழ்ந்தது. அந்த இரு உடன் பிறப்புகளைத் தேடும் நடவடிக்கையில் தீயணைப்பு மீட்புப்படையினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருவதாக சரவாக் மாநில பேச்சாளர் தெரிவித்தார்.