ஜோகூர் பாரு, மார்ச்.18-
இந்தோனேசியா, வட சுமத்திராவில் இன்று காலை 6 .22 மணியளவில் ஏற்பட்ட பலத்த நிலநடுக்கம், மலேசியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உணரப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும் ஜோகூர் மாநில மக்கள் அந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தை உணரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
அந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இதன் அதிர்வை தீபகற்ப மலேசியாவில் அனைத்து மாநிலங்களிலும் உணரப்பட்டதாக மலேசிய வானிலை இலாகாவாக மேட் மலேசியா தெரிவித்தது.
ஜோகூர் மாநில மக்களிடம் பரவலாகப் பேட்டி காணப்பட்ட போது, யாரும் உணரவில்லை என்றும், இது தொடர்பாக செய்தி வெளிவந்தப் பின்னரே இப்படியொரு நிலநடுக்கம் குறித்து அறிய முடிந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.