நிபோங் தெபால், மார்ச்.18-
பினாங்கு மாநிலத்திற்கு அலுவல் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று மாலையில் நிபோங் தெபால், சிம்பாங் அம்பாட், பண்டார் தாசெக் முத்தியாராவில் ரமலான் மாதச் சந்தையை பார்வையிட்டார்.
பிரதமருடன் பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ் மற்றும் கல்வி அமைச்சரும், நிபோங் தெபால் எம்.பி.யுமான பாஃட்லீனா சீடேக் ஆகியோர் காணப்பட்டனர்.
அன்வாரின் இவ்வருகையின் போது அவரை சிறார்கள் உட்பட பலதரப்பட்ட மக்கள் வரவேற்றனர். 110 ஸ்டால் கடைகளை கொண்ட அந்த ரமலான் சந்தையில் பிரதமர் சுமார் 20 நிமிடம் செலவிட்டார்.