ஜெராந்துட், மார்ச்.18-
ஹரிராயா பெருநாளை முன்னிட்டு சிக்கனக் கட்டணப் பிரிவில் பயணக் கட்டணத்தை உயர்த்தும் விரைவு பேருந்து நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பண்டிகைக் காலத்தை தங்களுக்குச் சாதகமான பயன்படுத்திக் கொண்டு சில விரைவு பேருந்து நிறுவனங்கள் பேருந்து கட்டணத்தை உயர்த்தியிருப்பதாக பரவலாக புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கோலாலம்பூர் மாநகரிலிருந்து கிழக்குக்கரை மாநிலங்களுக்குச் செல்லும் விரைவு பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக அதிகமான புகார்கள் வந்த வண்ணம் இருப்பதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.
சம்பந்தப்படட் நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும் சாத்தியம் இருப்பதாக அந்தோணி லோக் எச்சரித்துள்ளார்.