மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் அவசரத் தரையிறக்கம்

கோலாலம்பூர், மார்ச்.18-

ஜாகர்த்தாவிலிருந்து கோலாலம்பூரை நோக்கி வந்த கொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் , இன்று மாலையில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியது.

MH720 என்ற அந்த போயிங் 737-800 ரக விமானம் மாலை 6.17 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் ஓடுபாதை 32R இல் மாலை 6.17 மணியளவில் அவசரமாக தரையிறங்கியதாக மலேசிய வான் போக்குவரத்து துறையின் தலைமை செயல்முறை அதிகாரி நோராஸ்மான் மாஹ்மூட் தெரிவித்தார்.

அதற்கு முன்னதாக மாலை 6.02 மணியளவில் அந்த விமானத்திலிருந்து அவசர அழைப்பை விமானம் கட்டுப்பாட்டுக் கோபுரம் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த அவசர அழைப்பைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட போயிங் விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கு ஏதுவாக ஓடுபாதையில் மற்ற விமானங்கள் தரையிறங்கவும், பறக்கவும் அனுமதி மறுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் எந்தவோர் இடையூறின்றி விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஒரு வாரத்தில் மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறங்கியது இது இரண்டாவது சம்பவமாகும்.

கடந்த சனிக்கிழமை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து கோலாலம்பூரை நோக்கி புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸின் எம்.எச். 705 போயிங் விமானம் ஒன்றில் பறவை மோதியதன் காரணமாக இயந்திரத்தில் தீப்பிடித்துக் கொண்டது.

இதனைத் தொடர்து அந்த மலேசிய விமானம், மீண்டும் மணிலா, Ninoy Aquino அனைத்துலக விமான நிலையத்திற்கே திரும்பி, அவசரமாக தரையிறங்கியது.

விமானம் இயந்திரத்தில் தீப்பிழம்புககளும், புகையும் வந்ததைத் தொடர்ந்து அந்த விமானம் அவசரமாக தரையிறங்குதற்கு அனுமதிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS