இஸ்மாயில் சப்ரியிடம் எஸ்பிஆர்எம் விசாரணை தொடரும்

புத்ராஜெயா, மார்ச்.18-

லஞ்ச ஊழல் மற்றும் சட்டவிரோதப் பணமாற்றம் தொடர்பாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரியிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்டு வரும் விசாரணை நாளை புதன்கிழமை காலையில் தொடரும் என்று அந்த ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

இஸ்மாயில் சப்ரியிடம் நடத்தப்படும் விசாரணை ஐந்தாவது நாளாக தொடரும் என்று அவர் குறிப்பிட்டார். தனது நான்கு முன்னாள் அதிகாரிகளில் ஒருவரின் வீட்டில் 117 மில்லியன் ரொக்கப் பணம் மற்றும் தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டது தொடர்பில் இந்த விசாரணை தொடர்வதாக அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS